சுவரில்லாமல் சித்திரம் இல்லை
சுவரில்லாமல் சித்திரம் இல்லை..பழசுதான்..பரவால அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... Health ,fitness, healthy food,yoga...ப்ளா ப்ளா பத்திதான் இந்த ப்ளாக்ல பேச போறோம்... அதுவும் முக்கியமா பொண்ணுங்களோட மனம்,உடல்,வாழ்வியல்,உணவுமுறைகளை பத்தி பேசப் போறோம்.... அதிகமான மெனக்கெடல்கள் உடல அழகுபடுத்திக்கிறதுல நிச்சயம் இருக்கு..ஆனா மனசு?...கேள்விக்குறிதான்... மிக முக்கியமான ஒன்ன ,அதிகமா அதிகமானவர்கள் தவிர்க்கிற ஒர் விஷ்யம் -காலை உணவு..(நேரம் இல்ல .அது இதுன்னு கதை பேசாதிங்க...). எவன் எப்டி பண்ணா என்ன..நமக்கென்னனு போவோம்.யாரும் கண்டுக்க மாட்டோம் ..(social health). So..these three things... 1.Physical 2.Mental 3.Social health இதனோட முக்கியத்துவங்களும்,இதனை பராமரிக்க,நலமா வாழ்றதுக்கான வழிமுறைகளும்தான் இதுல பார்க்க போறோம்... இதப் பத்தி அறிவியல்,மனிதவியல்,ஆன்மீகவியல் ,சித்த மருத்துவம்,அறிஞர்கள்,இலக்கியங்கள்,மருத்துவர்கள் என்ன சொல்லிருக்காங்கனு நம்ம மொழில பேசப்போறோம்...